Sudharshini / 2015 மார்ச் 18 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.தி.பெருமாள்
புதிய தேர்தல் திருத்தச்சட்டம் பெருந்தோட்ட மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துத்தை எல்லா வகையிலும் பாதிப்படைய செய்யும் என்றாலும் கூட, பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சகல விதத்திலும் அவர்களது ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று இராஜாங்க கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும் அவரின் வழிக்காட்டலிலும் இலங்கை மக்கள் அனைவரும் ஐக்கியத்துடன் வாழ வழி அமைக்கப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும் என்று அவர் தெரிவித்தார்.
அம்பகமுவ பிரதேசசபை உறுப்பின் செல்லையா தலைமையில், மஸ்கெலியா ரோயல் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பெருந்தோட்ட மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் 7 1/2 பேர்ச் காணியில், வீடமைப்பு திட்டம் ஆகியவற்றை செய்துகொடுக்க ஜனாதிபதி முன்வந்துள்ளார் என்று கூறினார்.
ஆனால், கடந்த 15ஆம் திகதி 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, தொப்புள் கொடி உறவுகளை மறந்து உரையாற்றியமை மிகவும் வேதனைக்குரிய விடயம் என்று தெரிவித்த இராஜங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமரைச் சந்தித்து மலையக மக்களின் இன்றைய நிலை தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது, அங்கு உரையாற்றிய மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் லோரன்ஸ், நடக்கவிருக்கும் தேர்தல் முறையில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து எமது பிரதிநிதிகள் இருவர் மட்டுமே நாடாளுமன்றம் செல்ல முடியும். அதுவும் மக்கள் தங்களது வாக்குகளை சரியாக கொடுத்தால் மட்டுமே முடியும். இல்லை என்றால் அதுவும் கை நழுவி போய்விடும் என்றார்.
அதேவேளை, நடக்கவிருக்கும் தேர்தல் விகிதாசார முறையின் கீழ் நடக்கவேண்டும். இல்லையென்றால், கிராம சேவகர் பிரிவின் எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும். மேலும், தேர்தல் எல்லைகளை மறுசீர் செய்து, மலையக மக்களின் பிரதிநித்துவத்தை கூட்ட வழி செய்ய வேண்டும் என்று கூறிய அவர், நுவரெலியா, பதுளை, கண்டி, மஸ்கெலியா, இரத்தினபுரி ஆகிய பகுதிகளிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் பிரதிநிதிகளை அதிகரிக்க அரசாங்கம் வழிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago