Kogilavani / 2015 மார்ச் 19 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
பஸ்ஸில் விட்டுச்சென்ற பணப்பையை, நேர்மையாக நடந்துகொண்ட அந்த பஸ் சாரதியின் உதவியுடன் மாணவயொருவர் மீளப்பெற்றுக்கொண்ட சம்பவமொன்று ஹட்டனில், நேற்று புதன்கிழமை (18) இடம்பெற்றது.
பொகவந்தலாவை - கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர், மஸ்கெலியாவில் உள்ள தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது 7,200 ரூபாய் பணம், அடையாள அட்டை ஆகியன அடங்கிய பணப்பையை பஸ்ஸிலேயே மறந்து விட்டு சென்றுள்ளார்.
பணப்பையை பஸ்ஸில் வைத்துவிட்டு இறங்கியதை உணர்ந்த அம்மாணவி, உடனடியாக நோர்வூட் பொலிஸில் அது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
மாணவியின் தகவல்களை கருத்திற்கொண்டு பஸ்ஸை அடையாளம் கண்டுகொண்ட பொலிஸார், மேற்படி பஸ்ஸின் சாரதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பொலிஸார் அழைப்பை மேற்கொண்ட போது ஹட்டன் நகரை பஸ் அடைந்திருந்த போதிலும், உடனடியாக அந்த பஸ்ஸை திருப்பிக்கொண்டு நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற சாரதி, மேற்படி மாணவியின் பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago