2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

கர்ப்பிணி தாய்மாருக்கு பழுதடைந்த உணவுகள் விநியோகம்

Gavitha   / 2015 மார்ச் 22 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.தி.பெருமாள், ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவை வெஞ்சர் தோட்ட சுகாதார நிலையத்தில் கர்ப்பிணித்; தாய்மார்களுக்கு வழங்கப்படவிருந்த போஷாக்கு உணவுகளை வழங்க வேண்டாம் என பொதுச் சுகாதார அதிகாரி பி.கே.வசந்த பணித்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள 130 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படவிருந்த போஷாக்கு உணவு பொருட்கள் அடங்கிய பொதியை, பொகவந்தலாவை சுகாதார அதிகாரி சோதனை செய்தபோது. அதிலிருந்த கடலை, கௌபி, நெத்தலி போன்ற உணவு பொருட்கள் பழுதடைந்திருந்தமை தெரியவந்தது.

இதனையத்தே இந்த உணவுப்பொருட்களை வழங்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரி பணித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட 130 தாய்மார்களுக்கு, 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படவிருந்த போசாக்கு உணவே, இவ்வாறு பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உணவு பொருட்களை கினிகத்தேன பலநோக்கு கூட்டுறவு சங்கத்திடமிருந்து பெற்று, கினிகத்தேன பிரதேச செயலகம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் அம்பகமுவ பிரதேச செயலக உதவி செயலாளர் எச்.எம்..சி.ஹேரத்திடம் வினவியபோது, அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட சுமார் 2,900க்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார்களுக்கு 2,000 ரூபாய் பெறுமதியான உணவு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் இதன்போது வெஞ்சர் பிரிவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் கினிகத்தேன பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்து, தனியார் வர்த்தக நிலையத்தில் கொள்வனவு செய்யுமாறு பணித்துள்ளதுடன் பழுதடைந்த பொருட்களை வழங்கிய கினித்தேன பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .