Kogilavani / 2015 மார்ச் 25 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சிறுபான்மையினர் என்ற ரீதியில் இந்நாட்டின் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ பதவி வகிப்பதற்கு சிறுபான்மையினரால் முடியாது. அதேபோன்று எதிர்கட்சித் தலைவராகவும் எம்மால் முடியாதா?' என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருகோணமலை, கிண்ணியா மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டடம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இன்று இலங்கை அரசியலில், வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. யாரும் எதிர்பார்க்காத வகையில் அம்மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் ஏன் சிறுபான்மையைச் சார்ந்த ஒருவர் எதிர்க் கட்சித் தலைவராக முடியாது என்று கேள்வி எழுகிறது. எமது நாடாளுமன்றத்தில் தமிழர்கள் அதாவது, மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்த வரலாறும் சரித்திரமும் எமக்கு உண்டு' என்று சுட்டிக்காட்டினார்.
'இந்த நிலையில் சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக எதிர்க்கட்சி தலைவராக ஒருவரை நியமிக்க முடியும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் மலையக மக்கள் முன்னணி அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளது. இதனை அரசியலாக பார்க்காமல் சமூக ரீதியில் சிந்தித்து பார்க்க வேண்டும்.
எமக்கிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நான் இதனை கூறுகின்றேன். ஆனால், இதனை வைத்துக்கொண்டு ஒரு சிலர் அரசியல் செய்ய முற்படுகின்றார்கள். அதற்கு சிறுபான்மை மக்களாகிய நாம் இடமளிக்க கூடாது' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago