Gavitha / 2015 மார்ச் 26 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுப்பிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 800 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்பதே தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிலைப்பாடாகும் என்று சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில், பத்தனை போஹாவத்தை பிரதேசத்திலுள்ள கெலிவத்தை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (25) நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம், எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கின்ற போது, தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய அடிப்படைச் சம்பளமான 450 ரூபாய் 800 ரூபாய் அடிப்படைச் சம்பளமாக அதிகரிக்கப்பட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு, சிலர் நாள் சம்பளமாக 1,000 ரூபாய் பெற்றுத்தரப்போவதாக அறிக்கை விட்டு வருகின்றனர்.
அவ்வாறு 1,000 சம்பளத்தை பெற்றுத்தந்தால் அதனை நாம் வரவேற்போம். எனினும் எவ்விதமான நிபந்தனைகளுமின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 800 ரூபாய் வழங்கப்படுகின்ற பட்சத்திலேயே தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சுமையை ஈடு செய்து கொள்ள முடியும்.
மாதத்தில் 20 நாட்களுக்குக் குறையாது சேவை புரிகின்ற அரசாங்க ஊழியர்கள், தற்போது நாளொன்றுக்கு 1,500 ரூபாயுக்கு மேல் சம்பளம் பெறுகின்றனர். ஆனால் கடுமையான உடல் உழைப்பைத் தருகின்ற தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 450 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
ஆகவே தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 800 ரூபாயை வலியுறுத்தி தொழிலாளர் தேசிய சங்கம் எதிர்வரும் நாட்களில் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மண்டபத்திறப்பு விழாவில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், பிரதேச அமைப்பாளர்களான லெட்சுமணன், ஜெயராம், சுரேஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago