2026 மே 15, வெள்ளிக்கிழமை

தெல்தோட்டை வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 27 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெல்தோட்டை ஆதார வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டியைத் தாக்கி நேற்று மாலை சேதப்படுத்திய சில நபர்கள், வைத்தியசாலை தாதியர்களையும் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

இவற்றைக் கண்டித்தே இன்றைய தினம் வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வைத்தியசாலையின் அசமந்தப்போக்கை கண்டித்தே மேற்படி தாக்குதலை நடத்தியதாக தாக்குதலை நடத்திய நபர்கள் தெரிவித்ததுள்ளனர்.

சிகிச்சை பெறச்சென்ற நபர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பட்ட காலதாமதமும் குறித்த நோயாளியை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் அழைத்துச்செல்வதில் ஏற்பட்ட காலதாமதமுமே இவ்வாறான தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் என தாக்குதல்காரர்கள் மேலும் கூறியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .