2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

சப்ரகமுவ மாகாண மத்திய நூலகம்

Princiya Dixci   / 2015 மார்ச் 27 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
 
சப்ரகமுவ மாகாண சபையின் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இரத்தினபுரி புதிய நகரில் நிர்மானிக்கப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாண மத்திய நூலகம், எதிர்வரும் திங்கட்கிழமை (30) சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா மற்றும் மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களையும் உள்ளடக்கி தமிழ் மற்றும் சிங்கள வாசகர்களின் நலன் கருதி இரத்தினபுரி புதிய நகரில் திறந்து வைக்கப்படும் இந்த நூலகத்தில் கேட்போர் கூடம், கற்றல் அறை, குறிப்பெடுத்தல் பிரிவு, சிறுவர் நூலகம், கணினிப் பயிற்சி நிலையம் மற்றும் ஈ-நூலகம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .