2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

லோல்புறூக் தமிழ் மகா வித்தியால மாணவர்கள் அதிசிறந்த சித்தி

Kogilavani   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

நுவரெலியா கல்வி வலயதுக்குட்பட்ட லோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்திலிந்து, கடந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அனைவரும் உயர்தரதுக்கு தகுதி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் முத்து ஜெயராமன் தெரிவித்தார்.

இப்பாடசாலையிலிருந்து தோற்றிய 63 மாணவர்களில் சின்னத்தம்பி மோகன்ராஜ் 9ஏ, பாலா பிரதீபன் 8ஏ 1பீ, சதாசிவம் சரூபன் 6ஏ 3பீ 1சீ, சித்தியும் தம்பிராஜ் சசேன் 6ஏ 2சீ 1எஸ், சுபா 5ஏ 1பீ 3சீ ஆகியோர் அதிசிறந்த சித்திகளை பெற்றுள்ளனர்.

மேலும் பாட ரீதியாக சமயம், தமிழ்மொழி, வரலாறு, கத்தோலிக்கம், இஸ்லாம், வர்த்தகம், புவியியல், நடனம், சங்கீதம், மனைப்பொருளியல், சுகாதாரமும் உடற்கல்வியும், தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களில் 100 வீதமும் கணிதத்தில்; 83 வீதமும் தமிழ் இலக்கணத்தில்; 92 வீதமும் விவசாயத்தில்;  90 வீத  சித்தியை பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுமே 9 பாடங்களுடன் சித்தியடைந்துள்ளார்கள்.

இந்த பெருமைக்கு முன்நின்று உழைத்த சகல ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .