2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மஹாவலி கங்கையில் நீராடச்சென்ற சிறுவனை காணவில்லை

Kogilavani   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுரங்க ராஜநாயக்க

மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 13 வயது மாணவனொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அம்மாணவனுடன் நீரில் மூழ்கிய மேலும் இரு மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (06) மாலை காணாமல் போன மாணவனை மீட்கும் பணியில் பிரதேசவாசிகளும் சுழியோடிகளும் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் தரம் 8இல் கல்வி கற்கும் மாணவர்கள் மூவரே இவ்வாறு நீராடச் சென்றுள்ளனர். குளித்துகொண்டிருந்தபோது இவர்கள் நீரில் அடித்துசெல்லப்பட்டுள்ளதுடன் இவர்களில் இருவரை பிரதேசவாசிகள் உடனடியாக மீட்டுள்ளனர்.

மற்றைய சிறுவனை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X