Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தி.தவராஜ்
மலையகத்துக்கான தனியான பல்கலைக்கழகமொன்று ஸ்தாபிக்கப்படவேண்டும் என்ற நோக்கை வலியுறுத்தும் தேசிய மாநாடு ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வு பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளியல் துறை தலைவரும் பேராசிரியருமான எம்.சின்னத்தம்பி தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் தொடக்கவுரையை மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும் விரிவுரையாளருமான எஸ்.விஜயச்சந்திரன் நிகழ்தத்தினார்.
'உயர்கல்வியில் மலையக சமூகத்தின் பங்கேற்பும் எதிர்பார்ப்பும் சவால்களும்' எனும் தலைப்பில் கலந்துரையாடல்கள் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் அவரின் அறிமுக உரையுடன் ஆரம்பமானது.
'க.பொ.த உயர்தர அடைவுகளும் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்' எனும் தலைப்பில் கருத்துரையை மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எம்.சதீஸ் வழங்கினார்.
'மலையக பல்கலைக்கழகத்துக்கான கோரிக்கையும் அதன் சாத்தியப்பாடுகளும்' எனும் தலைப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.வாமதேவன் நிகழ்த்தினார்.
பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழக சமூக ஒருங்கிணைப்பும் எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் எனும் தலைப்பில் ஜி.நினல்ராஜ் உரை நிகழ்த்தினார்.
மலையக பல்கலைக்கழக புத்திஜீவிகளின் இன்றைய நிலைமைகளும் சமூக பொறுப்புடைமையும் எனும் தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக அரசறிவியல்துறை விரிவுரையாளர் இரா.ரமேஸ் கருத்துறையை வழங்கினார்.
பல்கலைக்கழக மலையக சமூகத்தினருக்கிடையில் வலைப்பின்னல் மற்றும் தேசிய அமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான அவசியமும் சாத்தியப்பாடுகளும் எனும் தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயச்சந்திரன் கருத்துரை வழங்கினார்.
தொடர்ந்து ஓய்வுபெற்ற மலையக முதுநிலை பேராசிரியர்களுக்கான பாராட்டும் கௌரவிப்பும் நிகழ்வில் பேராசிரியர் எம்.சின்னத்தம்பி, பேராசிரியர் சோ.சந்திரசேகரம் ஆகியோர் ஊவா மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் வடிவேல் சுரேஸ் மத்திய மாகாண கல்வியமைச்சர் எம்.ராம் இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago