2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

காணிகளுக்கான இரண்டாவது உறுதிப்பத்திரம் விரைவில் வழங்கப்படும்

Kogilavani   / 2015 மே 12 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெயலெட்சுமி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் காணி உறுதிபத்திரங்கள் போலியானதென சிலர் விமர்சிக்கின்றனர். அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் ஜனவசம ஆகிய இரண்டு முகாமைத்துவங்களின் கையொப்பத்துடனே காணி உறுதிகள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி உறுதிப்பத்திரங்களுக்கு மேலதிகமாக காணி அளவீடு செய்து விரைவில் இரண்டாவது உறுதிப் பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வரலாற்றில் முதன் முறையாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உறுதிபத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுறுதி பத்திரங்கள் போலியானது என சிலர் விமர்சிக்கின்றனர்.

தோட்டக் காணிகள் அனைத்தும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SPC)  மற்றும் ஜனவசம ஆகியவற்றுக்குச் சொந்தமானவையாகும். அவற்றை கம்பனிகள் குத்தகைக்கு எடுத்துள்ளன. அந்தக் கம்பனிகள், காணிகளை யாருக்கும் கையளிக்க முடியாது.

அதற்கான உரிமை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்  மற்றும்  ஜனவசம ஆகியவற்றுக்கே உள்ளது.  இந்த இரண்டு முகாமைத்துவங்களின் கையொப்பத்துடன் காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் காணிகள்  மதிப்பீடு செய்யப்பட்டு மீண்டும் இரண்டாவது உறுதிப் பத்திரம் வழங்கப்படவுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .