Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மே 12 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
'நுவரெலியாவுக்கு சென்றிருந்த போது இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளை சந்தித்தேன். அவர்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்த பயணத்தில் உணர்ந்துகொண்டேன்' என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தென்னிந்திய நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'நான் அரசியல் பேச விரும்பவில்லை. அதேபோல இங்குள்ள மற்ற சமூகங்களையும் குறைகூற விரும்பவில்லை. நான் இரண்டு தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளேன். ஒருமுறை என்னை விமான நிலையத்துடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதாவது நான் ஒரு வெளிநாட்டு பொதியைப்போல நாட்டிற்குள் வராமல் விமான நிலையத்துடன் திரும்பியனுப்பப்பட்டேன்.
அதற்கு பிறகு இம்முறையே வந்திருக்கின்றேன். இலங்கையில் தற்போது ஒரு சுமூகமான் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் அதனை குழப்பக்கூடாது. ஆனால் ஒரு விடயம் மாத்திரம் எனக்கு தெளிவாக தெரிகின்றது. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பல விடயங்களை சாதிக்க முடியும். அதனை இங்குள்ள அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
இலங்கையின் இயற்கை எழிலைக் கண்டு பிரமித்து போனேன். அதிலும் குறிப்பாக நுவரெலியாவையும் அதன் சூழலையும் பார்க்கின்ற பொழுது இங்கு சினிமாவுக்கு நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அதற்கு இலங்கை அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நான் மிகவிரைவில் அவ்வாறான ஒரு திட்டத்துடன் வருவதற்கு உத்தேசித்துள்ளேன். அதன்போது இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார்.
இலங்கையைப்பற்றி இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் ஒரு சிலர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நான் அங்கு சென்றவுடன் இங்குள்ள உண்மையான நிலைமை என்ன என்பது பற்றி அவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளேன்.
எதிர்காலத்தில் இலங்கையில் பல திரைப்படங்களை முழு அளவில் எடுப்பதற்கான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்' என அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago