2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குளவி கொட்டு: 20 மாணவர்கள் வைத்தியசாலையில்

Kogilavani   / 2015 மே 13 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

தலவாக்கலை, மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் புதன்கிழமை(13) நண்பகல் இடம்பெற்றுள்ளது. மட்டுக்கலை பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குளவிக்கொட்டு இலக்காண நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 14 மாணவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் 6 மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .