2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மாற்று தங்குமிடவசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Kogilavani   / 2015 மே 14 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மீரியாபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு மாற்று தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பணித்துள்ளார்.

மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்கள் இன்னும் தற்காலிக இடமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த குடும்பங்களின் நிலையை அறிந்து வருவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதியன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் குழு ஒன்று மீரியாபெத்தைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .