2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து விழுந்த தாயும் மகனும் காயம்

Kogilavani   / 2015 மே 14 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதியை நோர்வூட் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் நோர்வூட் வெஞ்சர் பகுதியில் இன்று வியாழக்கிழமை(14) காலை இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்தே மேற்படி இருவரும் விழுந்து காயமடைந்துள்ளனர். தாய் தனது பிள்ளையுடன் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்டபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .