Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 மே 18 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்கள் உரிய காலத்துக்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்காவிட்டால், அடுத்த வாரம் ஹட்டனில் தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட வேண்டிய நிலைமை ஏற்படுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்;கீட்டில் நுவரெலியா மாவட்டத்தில் முதற்கட்டமாக 250 தோட்டங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாங்கள் 1,000 ரூபாயை வாங்கித் தருகின்றோம். ஏனையவர்கள் குழப்ப வேண்டாமென்று சிலர் கூறினர். இதனைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் நாம் பொறுமை காத்து வந்தோம். எனினும் தொடர்ந்தும் இந்த விடயத்தில் சாக்குப் போக்குக் காட்டுவார்களானால் நாம் தொழிலாளர்களைத் திரட்டிக்கொண்டு போராட வேண்டிய நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டார்.
இதுவரை காலமும் அதிகாரத்தில் இருந்தவர்களால் செய்ய முடியாததை நாம் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் ஆரம்பித்துக்; காட்டியுள்ளோம். 375 தனி வீடுகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றோம். தோட்டத் தொழிலாளர்களுக்குக் காணி உறுதிகளை வழங்கும் திட்டத்தினையும் ஆரம்பித்துள்ளோம்.
இருந்த போதும் எம்மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இவற்றை நம்பக்கூடிய நிலைமையில் எமது மக்கள் இல்லை. மக்களின் நலன்கருதியே செயற்பட்டு வருகின்றோம் என அமைச்சர் தெரிவித்தார்.
தேர்தல் முறை மாற்றத்தின் போது எமது மக்கள் பாதிப்படையாத வகையில் நாம் செயற்பட வேண்டி தேவை ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் நாம் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம். ஆகவே எதிர்வரும் தேர்தலில் எமது வெற்றியை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இந்நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்.பொன்னையா, எஸ்.ஸ்ரீதரன், திருமதி சரஸ்வதி சிவகுரு, ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வி.புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
41 minute ago
59 minute ago