Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மே 20 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்த உதய, லசந்த நிறோஷன்
எம்பிலிப்பிட்டிய நகரத்தில் ஆயுதத்தை காண்பித்து 54 இலட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டதாக போலியான முறைப்பாடு செய்த கோடீஸ்வரர் உள்ளிட்ட மூவரை, திங்கட்கிழமை(18) கைதுசெய்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கோடீஸ்வர வர்த்தகர், வான் சாரதி மற்றும் கொள்ளையடித்ததாக கூறப்படும் நபர் ஆகிய மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பல்லேகமயில் உள்ள வர்த்தக வங்கியில் வைப்பில் ஈடுவதற்காக கடந்த 11ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு 54 இலட்சம் ரூபாவை வானில் எடுத்துக்கொண்டு சென்றபோது, எம்பிலிப்பிட்டிய நகரத்தில் வைத்து மரக்கறி பையுடன்; சென்றவருக்கு இடமளிக்கும்போதே ஆயுதத்தை காண்பித்த அச்சுறுத்திய இருவர் அப்பணத்தை வானுடன் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் வானை எம்பிலிப்பிட்டிய நகரத்தில் உள்ள அரச அதிகாரிகளின் வீடுகள் இருந்த இடத்திலிருந்து பொலிஸார் கடந்த 12ஆம் திகதி மீட்டனர். அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த கோடீஸ்வர வர்த்தகர் பணத்தையும் வானையும் இழந்துவிட்டு நடமாடியமை அம்பலமானது.
இதனையடுத்து மூவரையும் கைதுசெய்த பொலிஸார், அவர்களை எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அம்மூவரையும் எதிர்வரும் 25ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago