Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 25 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
அரசாங்கம் இன்று கல்விக்கு அதிக பணம் செலவு செய்து வருகின்றது. அரசாங்கம் கல்விக்கு அதிக படியான அக்கறையை காட்டி வருவதும் பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொள்வதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதும் பாராட்டத்தக்க விடயாமாகும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார்.
மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொது வாசிகசாலை கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை (24) பிரதேச மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் மலையக பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்படிவங்கள் கோரிய போது,11 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இதில் 12 ஆயிரம் பேர் சித்தி பெற்ற போதிலும் நேர்முக பரீட்சையின் போது, 9 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டனர். இருந்தபோதிலும் இதிலும் அதிகமானவர்களுக்கு பொது அறிவுகள் இல்லாத சூழ்நிலை காணப்பட்டது ஒரு வேதனைக்குரிய விடயமாகும் என்று இதன்போது அவர் குறிப்பிட்டார்.
இன்று அதிகமானவர்கள் பொது அறிவினை தேடிக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. இதன் காரணமாகவே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. எதிர்காலத்தில் எங்களுடைய சமூகத்தில் கற்கின்றவர்களும் பொது அறிவில் கூடிய அக்கறை செலுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
வடக்கு, கிழக்கில் இன்று யுத்தம் முடிவுக்கு வந்த பின் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுடைய காணி உரிமை, வீட்டு உரிமை பெற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுகின்றனர். இதன் காரணமாக இவர்களின் வேதனையை அறிந்த ஜனாதிபதியும் அவர்களுக்கான காணி, வீடுகளை வழங்குவதில் மும்மரமாக செயல்பட்டு வருகின்றார் என்று அவர் கூறினார்.
200 வருட காலமாக மலையக மக்கள் காணி வீட்டு உரிமை இல்லாமல் அடையாளம் இல்லாதவர்களாக வாழ்ந்து வந்தமை அனைவரும் அறிந்த உண்மையாகும். இன்று மலையக மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைக்கு ஜனாதிபதி உறுதி மொழி வழங்கியதையடுத்து, இன்று இவர்களுக்கான காணி மற்றும் தனி வீடு அமைக்கும் திட்டத்தினை செயல்முறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
எனவே எதிர்காலத்தில், மலையக பகுதிகளில் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
39 minute ago
3 hours ago
5 hours ago