Gavitha / 2015 மே 26 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்
கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழாவுடனான கடினபந்து கிரிக்கெட் போட்டியில் அஸ்-ஸம்ஸ் விளையாட்டு கழகத்தினர் 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றனர்.
கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழாவுடனான கடினபந்து கிரிக்கெட் போட்டியில் கல்முனை சந்தாங்கோணி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது. இதில் கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கல்முனை ஹரிஹைன்ஸ் அணியினர் மோதினர்.
இதன்போது, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்-ஸம்ஸ் அணியினர் முதலில் துடுப்படுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓடங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஹரிஹைன்ஸ் அணியினர் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றனர்.
போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக எம்.றிஸ்தி தெரிவுசெய்யப்பட்டார்.
இப்போட்டிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மத் கனி வெற்றி பெற்ற அணியினருக்கான கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago