2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஜ.ம.மு.இன் கண்டி மாவட்ட மாநாடு

Kogilavani   / 2015 மே 29 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட பேராளர் மாநாடு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (31), பிற்பகல் 1 மணிக்கு கண்டி, டி.எஸ்.சேனாநாயக்க வீதி, ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின்  தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசனின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், சிறப்பு அதிதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட தலைவரும் பெருந்தோட்டதுறை அமைச்சருமான லக்ஷமன் கிரியல்ல, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான வி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

முன்னணியின் அரசியல்குழு உறுப்பினர்கள் மற்றும் கண்டி மாவட்ட வட்டார செயலாளர்கள், அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள இம்மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னணியின் உப தலைவரும், கண்டி மாவட்ட செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான வேலு குமார் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட   செயற்குழு முன்னெடுத்து வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .