2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

உமா ஓயா திட்டத்தில் பாதித்தோருக்கு நட்டஈடு

Kogilavani   / 2015 ஜூன் 03 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்  

'உமா ஓயா திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நட்டஈடு  வழங்கப்படும் வரை அச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படாது' என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

'இத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நட்டஈடு வழங்கப்பட்டு வருவதாகவும்' அவர் தெரிவித்தார். உமா ஓயா திட்டம் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை கூறினார்.
 

'நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையாக இருக்க விரும்பவில்லை. ஆனால், சீரற்ற முறையில் தோண்டப்பட்டு வரும் சுரங்கம் காரணமாக  882பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை முறைப்பாடு செய்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. சுரங்கம் தோண்டுவதால் பிரதேசத்திலுள்ள வீடுகளின் சுவருகள் வெடிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு பிரதேசத்திலுள்ள  சுமார் 200இற்கும் மேற்பட்ட கிணறுகளில் நீர் வற்றிப்போய் உள்ளது.

எனவே, இப்பிரச்சினையை ஆராய்ந்து உமா ஓயா செயற்றிட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கடந்த காலங்களில் மேற்கொண்ட பல பேச்சுவார்த்தைகளின் பலனாக சுரங்கம் தோண்டும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நட்டஈடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். உமா ஓயா பல்நோக்கு செயற்றிட்டத்தினால் வெலிமடை மற்றும் பண்டாரவளை ஆகிய தேர்தல் தொகுதிகளிலுள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .