Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2015 ஜூன் 04 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் தொண்டமான் மைதானத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிக்கும் கால்நடை அமைச்சிக்கும் இன்று வியாழக்கிழமை (04) பகிர்ந்தளிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொருட்களை 17.02.2015 அன்று நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் வைத்து மக்களுக்கு கையளிக்கும் போது, ஹட்டன் பதில் நீதவான் தமயந்தி பெர்ணாண்டோவினால் குறித்த பொருட்களை பொதுமக்களிடம் பகிர்ந்தளிக்க வேண்டாம் என்ற உத்தரவு அறிக்கையின் பிரதியை நோர்வூட் பொலிஸார் இ.தொ.கா பொது செயலாளார் ஆறுமுகன் தொண்;டமானிடம் கையளித்தனர்.
அதனடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நோர்வூட் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் இது சம்மந்தமாக சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஜந்து உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, நோர்வூட் மைதானத்திலிருக்கும் பொருட்களில் சட்டபூர்வமான நீதியான முறையில் காணப்படும் பொருட்களை சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்துக்கும் சட்டபூர்வமற்ற நீதியற்ற முறையில் காணப்படும் பொருட்களை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிக்கும் கால்நடை அமைச்சிக்கும் வழங்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே, கடந்த மே மாதம் 28ஆம் திகதி உத்திரவிட்டார்.
இதற்கமையவே குறித்த பொருட்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிக்கும் கால்நடை அமைச்சிக்கும் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சீமெந்து இயந்திரம், தகரம், கூடாரங்கள் மற்றும் கதிரைகள் உட்பட பல பொருட்கள் இதில் உள்ளடங்கியிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
27 minute ago