2026 மே 14, வியாழக்கிழமை

dd

மாகாண கல்வித்திணைக்களங்களே பயிற்சிகளை வழங்க வேண்டும்:இராதா

Sudharshini   / 2015 ஜூன் 07 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தியாகு

மலையக பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கான பாடசாலைகளையும் அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டிய பொறுப்பு மாகாண கல்வித்திணைக்களங்களுக்கு உரியதாகும். ஆனால், மாகாணங்கள் நியமனம் பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நியமனம் வழங்குவது பொறுத்தமற்ற செயற்பாடாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மத்திய மாகாண கல்வி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நிகழ்வு நேற்று (06) ஹட்டனில் நடைபெற்றது. இதன்போது ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

குறித்த நியமனம் தொடர்பான போட்டி பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு என்பன கல்வி அமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டது. அதன்படி கல்வி அமைச்சு மாகாணங்களுக்கான விவரங்களை அனுப்பி வைத்தது.

இந்நியமனத்தை ஒரு சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். தயவு செய்து இதனை அரசியலாக்க வேண்டாம். நான் இதனை மிகுந்த போராட்டத்துக்கு மத்தியிலேயே பெற்றுக் கொடுத்துள்ளேன்.

அதேபோல்,  எஞ்சியுள்ள 963 நியமனங்களையும் நான் மிக விரைவில் பெற்றுக் கொடுப்பேன். இது தொடர்பாக எதிர்வரும் 9,10,11 ஆகிய தினங்களில் இரத்தினபுரி, பதுளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் கலந்துரையாடல் ஒன்றை எமது அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

அதேவேளை, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் ஆசிரியர் உதவியாளர்களுக்கான பயிற்சி நெறிகளை அந்த மாகாணங்கள் ஆரம்பித்துள்ள போதிலும், மத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான பயிற்சி நெறிகளை இன்னும் அந்த மாகாண கல்வி திணைக்களம் முன்னெடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .