2026 மே 14, வியாழக்கிழமை

மாத்தளை விபத்தில் 4பேர் பலி; 13பேர் படுகாயம்

Kanagaraj   / 2015 ஜூன் 07 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, செம்பூகவத்தையில் வானொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியானதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாத்தளை, கண்டி ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஆறு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், சம்வத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள நால்வர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை இஸதீன் பிரதேசத்திலிருந்து சுற்றுலாவுக்கு சென்றவர்களின் வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .