Kogilavani / 2015 ஜூன் 08 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மக்களை திசை திருப்பும் வீதிப் போராட்டங்கள் அவர்களது சம்பளத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் தடையாக அமைந்துவிடக் கூடாது' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத்தில் வாழும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் வென்றெடுப்பதற்கு, சகல பெருந்தோட்ட தொழிலாளர்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணையுமாறும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிலுறவு இயக்குநர் எஸ்.ஜோதிக்கண்ணன் தெரிவித்துள்ளதாவது,
'தோட்ட மக்களின் உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் அன்று முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே குரல் கொடுத்து வருகிறது. பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிமுக்கியமான பெரிய சங்கமாக இ.தொ.காவை அங்கீகரித்துள்ளது. எதிரணிகள் கூட இ.தொ.காவையொட்டியே சம்பளப் பேச்சு வார்த்தைகளில் கலந்துகொள்கின்றன.
இந்நிலையில் அற்பசொற்ப எண்ணிக்கையைக் கொண்ட எதிரணி சங்கங்கள் ஏகோபித்து குரல் எழுப்பினாலும் அது பலிதமாகக் கூடிய நிலைப்பாடு கிடையாது.
எதுஎவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் அவர்களது அபிலாசைகளையும் தக்க தருணத்தில் இ.தொ.கா பூர்த்தி செய்யும்.
எனவே சகல தோட்ட தொழிலாளர்களையும் ஓரணியில் இணைத்து கொள்வதன் மூலமாக அவர்களது உரிமைகள், சலுகைகள், பாதுகாப்புகள் உரிய முறையில் நிறைவேற்றிக் கொள்வதற்கு வழிசமைக்கும்.
மக்களை திசை திருப்பும் வீதிப் போராட்டங்கள் அவர்களது சம்பளத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் தடையாக அமைந்துவிடக் கூடாது என்பது இ.தொ.கா வின் நிலைப்பாடு.
எனவே, இ.தொ.காவை நம்பியிருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்கும் என்பதில் இ.தொ.கா உறுதியாக உள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago