Sudharshini / 2015 ஜூன் 08 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி, நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
1,000 பாடசாலை திட்டத்தின் கீழ், ஆயிரம் பாடசாலை திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலைகளிலும் தனியான ஆரம்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அதற்கு அதிபர் நியமிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயமும் ஆயிரம் பாடசாலை திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும் இப்பாடசாலைக்கான ஆரம்ப பிரிவு இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.
இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு பல முறை சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.



6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago