Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 10 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
மத்திய மாகாணத்தில் தமிழ்க் கல்வி அமைச்சரென ஒருவரும் நியமிக்கப்படவில்லையென மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மத்திய மாகாண சபையின் மாதாந்த கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (9) காலை பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கேள்வி எழுப்பிய மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலு குமார், 'மத்திய மாகாணசபையில் தமிழ்க் கல்வி அமைச்சு என ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதா? தமிழ்க் கல்வி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாரா? ஒரு சிலர் தங்களை கல்வி அமைச்சர் என பொய்யாக அறிமுகப்படுத்திக் கொண்டு அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டு பாடசாலை அதிபர்களையும் கல்வி அதிகாரிகளையும் பிழையாக வழி நடத்த முயற்சிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக உரிய தெளிவுபடுத்தலை மத்திய மாகாண முதலமைச்சர் வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அத்துடன், 'மத்திய மாகாண சபையில் தமிழ்க் கல்வி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. எல்லா அமைச்சுகளுக்கும் நியமிப்பதுபோல கல்வி அமைச்சுக்கு ஒரு சிலரை மேற்பார்வையாளர்களாக நியமித்துள்ளோம். இது மாகாண அமைச்சுக்களில் நியமிக்கப்படுவது வழமையாகும்' என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago