Kogilavani / 2015 ஜூன் 11 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
'நூறு நாள் முடிவும் நாட்டுக்காக புதிய பயணம்'; என்ற தலைப்பிலான மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை, மாலை 3.00 மணிக்கு இரத்தினபுரி நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின்; நிவித்திகலை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,
நாட்டின் நூறு நாள் முடிவும் நாட்டுக்காக புதிய பயணம் என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கருத்தரங்கை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைப்பீடம் மாவட்டங்கள் தோறும் நடாத்தி வருகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தற்கான கருத்தரங்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நகர சபை மண்டபத்தில் நடைபெறுவுள்ளது.
இக்கருத்தரங்கில் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக ஜே.வி.பியின் நிவித்திகலை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago