Kogilavani / 2015 ஜூன் 12 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுவரும் தொழில்நுட்ப கூடங்களும் விஞ்ஞான ஆய்வுக்கூடங்களும் மலையக மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமென மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
டிக்கோயா கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்குதொடர்;ந்தும் தெரிவித்த அவர்,
'கிராமம் மற்றும் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில்; சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சிறந்த முறையில் உள்ளதாக இங்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு செல்கின்ற பாடசாலை அதிபர மற்றும் ஆசிரயர்ககளுக்கும் ஆலோசனை வழங்குகின்ற கல்வி அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவை ஏற்படுத்துவதற்கு கல்வி இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாணக் கல்வியமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு வரவுள்ளேன்.
இந்த தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்துக்குச் செல்லும் பாதையை எனது நிதியொதுக்கீட்டில் செப்பனிடப்பட்டமையை போல மாணவர்களின் நலன்கருதி மேலும் பல உதவிகளை நல்குவதற்கு காத்திருக்கின்றேன்' என தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago