Suganthini Ratnam / 2015 ஜூன் 22 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
சட்டவிரோதமாக பலா மற்றும் மஹோகனி மரப் பலகைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்றை கண்டி – குருநாகல் வீதியில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார்; நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மரத்தூள் பொதிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியை கண்ட கட்டுகஸ்தோட்டை பொலிஸார், அதை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். லொறியின்; மேற்புறத்தில் மரத்தூள் பொதிகளும் அதற்கு கீழ், பலா மற்றும் மஹோகனி மரப்பலகைகளும் காணப்பட்டுள்ளன.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago