Gavitha / 2015 ஜூன் 24 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலிய, மவுசாகலை நீர்த்தேக்கப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவர், நேற்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை 1.30 மணியளவில் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் மஸ்கெலியாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
உயர் பாதுபாப்பு வலய பகுதியான மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு பகுதியிலுள்ள நீர் ஓடையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டனர்.
விசேட அதிரடிப்படையின் உயரதிகாரி சாந்த ரத்னபிட்டிய தலைமையிலான குழுவினர், நேற்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஸ்கெலியா பொலிஸார் கூறினர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago