Gavitha / 2015 ஜூன் 24 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷினி
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சுக்கு பொறுப்பாளராக கடமையேற்றுள்ள நானே, மாகாண தமிழ் கல்வி அமைச்சராவேன். இதனை புரிந்;து கொள்ளாமல் சில அரசியல்வாதிகள் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை முன்வைத்து மக்களை குழப்புகின்றனர் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ராம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு விவகாரம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) அவரிடம் வினவியபோது அவர் இதனை கூறினார்.
'மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் விவகாரம் தொடர்பில் போதியளவில் விளக்கம் இல்லாததாலேயே சில மலையக அரசியல் தலைமைகள், முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
சௌமியமூர்த்தி தொண்;டமான் காலத்திலிருந்து இன்று வரை, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரின் செயலாளருக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவரே மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக செயற்பட்டுவருகின்றார்' என்றும் ராம் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .