Gavitha / 2015 ஜூன் 24 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
வறுமையில் வாடும் மக்களது வீடுகளை கடந்த அரசாங்கம் உடைத்து அவர்களை வீதிக்கு இழுத்துப் போட்ட போதும் எமது அரசாங்கம் வறியவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து வருவதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், நேற்று செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார்.
கண்டி, ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான கடனுதவி வழங்கும் நிகழ்வு, கட்டுகஸ்தோட்டை ரிவர்சைட் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், 'வரலாற்றில் பல தலைவர்கள் வறிய மக்களை மையமாகக் கொண்டு பல திட்டங்களை அமுல்படுத்திய போதும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் திட்டமே மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றது. அவர் ஆரம்பித்த பத்து இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம், ஐ.நா. சபையும் ஏற்றுக்கொண்ட திட்டமாக மாறியுள்ளது. இன்று அவரது புதல்வர் அதற்கு நிகரான ஒரு வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து நடத்திக்கொண்டு செல்கின்றார்' என அவர் குறிப்பிட்டார்.
'கடந்த அரசாங்கம், வறுமையில் வாடும் மக்களது வீடமைகளை உடைத்து அவர்களை வீதிக்கு இழுத்துப் போட்ட போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட எமது அரசாங்கம் வறிய மக்களின் வீடு இல்லாத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க முன்வந்துள்ளது' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .