Sudharshini / 2015 ஜூன் 24 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டெதன் செம்புவத்தை தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி தோட்டத்தை சேர்ந்த நபரொருவருக்கும் இவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக சம்மந்தப்பட்ட நபர், தந்தை, தாய், மகள் என மூவரையும் கூரிய ஆயுதத்தால் நேற்று (23) இரவு தாக்கியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் எனினும் சந்தேக நபர் காயங்களுக்குள்ளாகி இருப்பதனால் பொலிஸ் பாதுகாப்புடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago