Sudharshini / 2015 ஜூன் 28 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தி.தவராஜ்
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 124 ஆவது ஸ்தாபகர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கல்லூரியின் அதிபர் எஸ்.விஜேசிங் தலைமையில் நாளை திங்கட்கிழமை (29) காலை 9.00 மணிக்கு ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த சாதாரணதர உயர்தர தமிழ் மொழித்தினம், ஆங்கில மொழித்தினம் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த அடைவுகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளதுடன் 'த ஹைலன்ஸ்' இதழும் வெளியிடப்படவுள்ளது.
ஹட்டன் கல்வி வலயப்பணிப்பாளர் எஸ்.பி.இராஜசேகரம் முன்னிலையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் நுண்கலை மற்றும் கலாசார பீடங்களின் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு, கௌரவ அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும் சிங்கப்பூர் கிறிஸ்மா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளருமான டி.சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago