2026 மே 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத இறைச்சிக் கடை முற்றுகை

Kogilavani   / 2015 ஜூன் 28 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவை, கெவல்கழுவ பகுதியில் அனுமதிபத்திரமின்றி நடத்திவரப்பட்ட இறைச்சிக்கடையை ஹட்டன் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுள்ளதுடன் உரிமையாளரையும் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, இரண்டு கன்றுகள் மற்றும் ஆடொன்றையும் உயிருடன் மீட்டுள்ளதுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இக்கடையானது, மாநகர சபையின் அனுமதியின்றி கடந்த பலவருடங்களாக இயங்கி வந்தது.  

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .