Sudharshini / 2015 ஜூன் 30 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அந்த பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மருந்தகமொன்றிலுள்ள இருவரை செவ்வாய்க்கிழமை (30) ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து 30 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதையை ஏற்படுத்தும் இந்த குளிசையை தலா 70 ரூபாய்க்கு மேற்படி சந்தேக நபர்கள், பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரையும் கைது செய்தபோது அவர்களிடமிருந்து போதையை ஏற்படுத்தும் 73 குளிசைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் இருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே மேற்படி சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் இவர்களை நாளை புதன்கிழமை (01) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

16 minute ago
35 minute ago
51 minute ago
suresh Wednesday, 01 July 2015 07:46 PM
Dont leave them, better kill them.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago
51 minute ago