Kogilavani / 2015 ஜூலை 01 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டங்களில் பணிபுரிந்து கடந்த காலங்களில் சேவைக்கால பணத்தை பெற்றுகொள்ளாத 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிர்வரும் 5 ஆம் திகதி சேவைகால பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலாபெக்க அரச பெருந்;தோட்டயாக்க தலைவர் ஏ.வடுகொடுப்பிட்டிய, நேற்று செவ்வாய்க்கிழமை(6) தெரிவித்தார்.
இதற்கமைவாக, பன்வில பெருந்தோட்டயாக்கத்துக்குட்பட்ட கெலாபெக்க -80, ஆகல -30, கல்பி -27, கோம்பர -53, அலகொல -16, ஆகிய தோட்டங்களை சேர்ந்த 296 பேருக்கு சேவைகால பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டுகொடபிட்டிய தெரிவித்தார்.
இதேவேளை, ரங்கல பெருந்தோட்டயாக்கத்துக்குட்பட்ட ரங்கலவை சேர்ந்த 15 பேருக்கும் கொடகங்கயைச் சேர்ந்த 14 பேருக்கும் இப்பணம் வழங்கப்படவுள்ளது.
மேலும், நிகுலோயா -10, ஓபல்கல 07, மிட்லேன் -20 மற்றும் மாத்தளை உன்னாஸ்கிரிய-20, ஏ பாக் -70 ஆகியோருக்கு சேவைநலன் பணத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சேவைகால பணம் வழங்கப்படவில்லை என கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் வழங்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இப்பணத்தை மிகவிரைவில் பெற்றுகொடுக்க முடிந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பன்வில பிரதிநிதி எம்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago