Kogilavani / 2015 ஜூலை 01 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தி.தவராஜ்
'காலத்தின் தேவையறிந்து புதிய மாறுதல்களை துணிகரமாகச் செயற்படுத்தி நவீன கல்வி உலகுக்கு ஏற்ற விதத்தில் மாணவ சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் ஹைலன்ஸ் கல்லூரியானது எப்போதும் பின் நிற்பதே இல்லை' என ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தெரிவித்தார்.
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் நிறுவகர் தினம் திங்கட்கிழமை ஹட்டன், டி.கே.டபிள்யு. கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
'பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக ஹைலன்ஸ் கல்லூரி திகழ்கின்றது. கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் மும்மொழிக் கல்வியின் தேவை உணரப்பட்டமை திருப்புமுனையாக அமைந்துள்ளது. அந்தவகையில் ஆங்கிலமொழிப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு பல வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளன' என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கல்லூரி அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர் சின்னையா மௌனகுரு, பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, கல்லூரியின் பழைய மாணவரும் முதலாவது பொறியியலாளருமம் சிங்கப்பூர் கிறிஸ்மா பிரைவேட் லிமிட்டெட் பணிப்பாளருமான துரைசாமிப்பிள்ளை சந்திரசேகரன், ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பி.இராஜசேகரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழ் மொழி தினம், ஆங்கில மொழி தினம் உட்பட இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமைகாட்டிய சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago