2026 மே 14, வியாழக்கிழமை

கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரருக்கான நியமன பத்திரம் வழங்கப்படும்

Kogilavani   / 2015 ஜூலை 01 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சி.எம்.ரிஃபாத்

கண்டி, அஸ்கிரிய பௌத்த பீடத்தின் புதிய மகாநாயக்க தேரராக தெரிவு செய்யப்பட்ட கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரருக்கான  சம்பிரதாயபூர்வமான நியமன பத்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை (06)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வைபவ ரீதியாக கையளிக்கப்படவுள்ளதாக கண்டி அரசு தகவல் திணைக்கள அலுவலக அதிகாரி ததுஜா அபேசேகர தெரிவித்தார்.

இதற்கான வைபவம் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைபவத்தில், மல்வத்த மகாநாயக்க தேரர், தியவதன நிலமே பஸ்நாயக்க நிலமேக்கள் உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .