Kogilavani / 2015 ஜூலை 01 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப்பத்தனை, வெவர்லி கிராம சேவகர் பிரிவுக்கு, தமிழ் தெரிந்த கிராம உத்தியோகத்தரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ,நேற்று செவ்வாய்க்கிழமை(30) தெரிவித்தார்.
இப்பிரிவில் தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழ்ந்து வருவதாகவும் இந்நிலையில் கிராம உத்தியோகத்தராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படாததால் இம்மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிகொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, தமிழர் ஒருவரை கிராம உத்தியோகத்தராக நியமிக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய நுவரெலிய மாவட்டச் செயலாளர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் தமிழர் ஒருவரை கிராம உத்தியோகத்தராக நியமிக்குமாறு நுவரெலிய பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago