Kanagaraj / 2015 ஜூலை 05 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ரஞ்சித் ராஜபக்ஷ
பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிள்,நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பொகவந்தலாவை- கொழும்பு பஸ்ஸூடன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசிரிகம பகுதியில் வைத்து இன்று காலை 9 மணியளவில் மோதிவிபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு படுங்காயமடைந்துள்ளனர்.
படுங்காயம்பட்ட இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago