Kogilavani / 2015 ஜூலை 05 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
ஆறு மாதங்களுக்கு முன் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ஷவுக்கு பயப்பட தேவையில்லை என்று தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவிதத்hர்.
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் தோல்வியடைய செய்தனர்.
மீண்டும் அதே ஊழல் மோசடிக்காரர்களை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு மக்க்ள ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி ஈட்டும் என்பது தெரிந்த சிலர் மஹிந்த ராஜபக்ஷவை முன் வைத்து மக்கள் மத்தியில் ஒரு பயத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.
ஆனாலும் ஆறு மாதங்களுக்கு முன் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவரும் பயப்பட தேவையில்லை. அவர் தேர்தலில் போட்டியிட்டாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை.
இம்முறை ஐக்கிய தேசிய கட்சி ஒரு நிரந்தர ஆட்;சியை அமைக்கும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எங்களுடன் இருக்காத பலர் தற்போது எங்களுடன் இணைந்த வன்னம் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.


8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago