Kogilavani / 2015 ஜூலை 10 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் நால்வரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலையில் புதன்கிழமை(8) இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இருவரை அதேதோட்டத்தை சேர்ந்த மேற்படி நால்வரும் தாக்கியுள்ளனர்.
இவர்களின் தாக்குதலில் காயமடைந்த நிலையில், டிக்கோயா மணிக்கவத்தையை சேர்ந்த எஸ்.சிவகுமார், ஆர்.நந்தகுமார் ஆகிய இருவரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில், ஹட்டன் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்படி நால்வரும் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டதுடன் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026