Kogilavani / 2015 ஜூலை 10 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேச்சுவார்த்தையை திசைதிருப்பும் வகையில் முதலாளிமார் சம்மேளனம் நடந்துகொண்டதால்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையிலிருந்து விளகிகொண்டதாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டமானது, கூட்டு ஒப்பந்தத்துக்கு குந்தகமானது என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கும் வகையில் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
'கடந்த நான்காம்கட்ட பேச்சு வார்த்தையின்போது தொழிலாளர்களின் வேலைக்கான வரவு, வேலை செய்த நாட்களுக்கான ஊக்குவிப்பு என்ற அடிப்படையிலேயே சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. புதிய யோசனைகளை தட்டிக்கழிக்கும் தந்திரோபாயமாக இதனை முதலாளிமார் சம்மேளனம் சமர்ப்பித்தது.
இத்தகைய, புதிய யோசனைகளை ஒருவருடத்துக்கு முன்னரே எமக்கு தெரிவித்திருந்தால் அதன் சாதக, பாதகங்களை ஆய்வுசெய்து அதனடிப்படையில் தீர்மானித்திருக்கலாம்' என அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
பெருந்தோட்ட முகாமையாளர்களுடன் கலந்துரையாடி, தீர்க்கமான முடிவுக்கு வருமாறும் அவர் முதலாளிமார் சம்மேளனத்தை கோரியுள்ளார்.
இதேவேளை, மலையகம் எங்குமுள்ள தோட்டங்கள் அனைத்திலும் நேற்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்ததாக இ.தொ.கா.வின் தொழிலுறவு இயக்குநர் எஸ்.ஜோதிக்கண்ணன் தெரிவித்தார்.
'தமது கோரிக்கையில் எவ்வித மாற்றமுமின்றி தமக்குரிய சம்பளம் கிடைக்கும் வரை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட தயராகவுள்ளதாகவும் தவறும் பட்சத்தில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும்' அவர் மேலும் கூறியுள்ளார்.
4 minute ago
10 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
27 minute ago