Kogilavani / 2015 ஜூலை 10 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாற்று வழிகளை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்துமாறு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், தனது அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் புதன்கிழமை(8) நடைபெற்ற உயரதிகாரிகளுடனான முக்கிய கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கண்டி நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் அதிகரித்து காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மகாவலி கங்கையை அண்டியதாக கண்ணொருவையிலிருந்து, கொஹாகொட ஊடாக கட்டுகஸ்தோட்டை நோக்கிச் செல்லும் பாதையோடு கட்டுகஸ்தோட்டையிலிருந்து மடவளையூடாக திகனை செல்லும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் வரும் பாதையை தொடர்புபடுத்துவதன் மூலம் போக்குவரத்தை இலகுவாக்கலாமென அவர் மேலும் தெரிவித்தார்.
பழைமை வாய்ந்த பாரம்பரிய கண்டி தபால் நிலையத்தை புனரமைப்பதோடு, போகம்பரை சிறைச்சாலை வளவு உட்பட நகரின் ஏனைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் மறுசீரமைப்பதனூடாக மரபுரிமை நகரம் என பிரகடனப் படுத்தப்பட்டுள்ள கண்டியின் எழிலுக்கு மேலும் மெருகூட்டலாம் என்றார்.
4 minute ago
10 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
27 minute ago