Kogilavani / 2015 ஜூலை 12 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
சிறுவர்களுக்கு ஆபாச படங்களை காட்டிய குற்றச்சாட்டில் 53 வயது நபரொருவரை அலவத்துகொடை பொலிஸார் சனிக்கிழமை (11) மாலை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 125க்கும் மேற்பட்ட இறுவட்டுக்கள் மற்றும் ஆபாசப்படங்கள் அடங்கிய அலைபேசி என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
தனது வீட்டிலிருக்கும் பறவைகளை பார்வையிடவென 7 மற்றும் 8 வயதுடைய சிறுவர்களை அழைத்துச் சென்றே, அவர்களுக்கு இந்நபர் ஆபாசப் படங்களைக் காட்டியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அக்குறணையை அண்மித்த பகுதியிலுள்ள மேற்படி சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், சிலகாலம் வெளிநாட்டில் பணிபுரிந்துள்ளதாகவும் இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. இந்நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago