Kogilavani / 2015 ஜூலை 13 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொரிஸ் என்டனி
ஐக்கிய தேசியக் கட்சி தனது இயலாத தன்மையை மூடி மறைப்பதற்காகவே நாடாளுமன்றத்தைக் கலைத்தது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
நிவித்திகலையில் உள்ள முன்னாள் மின்சக்தி பிரதியமைச்சர் பிறேமலால் ஜயசேகரவின் இல்லத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில், உள்நாட்டு அலுவல்கள் முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் டி சொய்ஸா, ஜானக வக்கும்புர, சபரகமுவ மாகாணசபை அமைச்சர்களான அத்துலகுமார ராகுபத்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்வதே தமது நோக்கமென இதன்போது அவர்கள் தெரிவித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சிய நல்லாட்சி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.


6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago