Princiya Dixci / 2015 ஜூலை 16 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் மஹிந்த அபேகோனை, பிணையில் செல்வதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
2001ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, கண்டி கலஹா பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இவர், கடந்த இரண்டு வருடங்களாக சிறைதண்டனையை அனுபவித்து வந்தார்.
சிறைத் தண்டனையை எதிர்த்;து கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தார்.
மேன்முறையீடு தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் இடம்பெற்றபோதே, 30,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.
53 minute ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
7 hours ago