Administrator / 2015 ஜூலை 17 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் தொழில் அமைச்சில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடையவில்லை என்றும் சில ஊடகங்கள் இதனை திரிபுபடுத்திவிட்டதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரிஸின் தலைவர் முத்துசிவலிங்கம்,தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தையின்போது, முதலாளிமார் சம்மேளனமானமானது 700 ரூபாய் சம்பளம் வீதம் கொடுப்பதற்கு முன்வந்தது முன்னேற்ற அறிகுறி என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'23 பெருந்தோட்ட கம்பனிகளில் சில கம்பனிகள் தொழிலாளர்களால் முன்னெக்கப்பட்டுவரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டத்துக்கான வேதனத்தை தருவதற்கு முன்வந்தது. சில கம்பனிகள் முன்வரவில்லை. இதனால் சில தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில அரசியல்வாதிகளும் தமது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றனர்' என்றார்.
'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்துள்ளோம். இதன்போது, 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்துவதுடன் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டத்துக்கான சம்பளத்தை ஊதியத்தையும் பெற்றுகொடுப்போம்' என்று தெரிவித்தார்.
முதலாளிமார் சம்மேளனத்துக்கு அளுத்தம் கொடுப்பதற்காக தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
53 minute ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
7 hours ago